மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் சரகத்திற்கு உள்பட்ட கோனேரிராஜபுரம் கடை வீதியில் பாலையூர் காவல் துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அரிவாளை வைத்துக்கொண்டு ஒருவர் கடைகளில் மிரட்டி வசூல் கேட்பதாக கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் தகராறில் ஈடுபட்ட நபரை விசாரணை செய்தனர்.
அப்போது, அந்த நபர் கலைவாணனிடமே விசாரணையா என்று அரிவாளால் உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் கழுத்தில் வெட்ட முயன்றுள்ளார். இதனால் அவரது தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த நபரை காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
பின்னர், அந்த நபரிடம் நடத்திய விசாரணையில்,அவர் மணல்மேடு சோழியன்கோட்டத்தை சேர்ந்த ரவுடி அன்பழகன் மகன் கலைவாணன்(36) என தெரியவந்தது. இவர் மீது ஐந்து கொலை வழக்குகள், நான்கு வழிப்பறி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து கலைவாணனைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: