நாகப்பட்டினம் வெளிப்பாளையம் சிவன்கோயிலுக்குச் சொந்தமான குளத்தைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழை, மேட்டூர் அணையில் இருந்து வந்த தண்ணீரின் காரணமாக சிவன் கோயில் குளம் படிக்கட்டுகளைத் தாண்டி தண்ணீர் நிரம்பி வழிகிறது.
இதனால், வடகரைப் பகுதியில் குளத்தைச் சுற்றி கட்டப்பட்ட சங்கர், கண்ணன், ஆனந்த், பாலு, சுகந்தி உள்ளிட்டவர்களின் எட்டு வீடுகளின் சுவர்கள் அடுத்தடுத்து குளத்தில் மூழ்கின. இதையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். அதைத் தொடர்ந்து வீட்டின் மறுபகுதி சுவர்களும், வீட்டில் இருந்த பொருள்களும் குளத்தில் மூழ்கின.
விபத்து குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: குன்னூரில் 13 ஆண்டுகளாக தகரக் கூடாரத்தில் வசிக்கும் 60 இலங்கைத் தமிழ் குடும்பங்கள்