உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுப் பரவுதலை தடுக்கும் பொருட்டு நாடுமுழுவதும் ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 11 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாகப்பட்டினம்- திருவாரூர் மாவட்டங்களின் எல்லையான கானூர் சோதனைச்சாவடியில் கீழ்வேளூர் காவல் துறையினர் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, நாமக்கல், தஞ்சாவூர், திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சரக்கு லாரி மூலமாகவும், நடந்தும் 10 பேர் வந்தனர்.
இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் அவர்களை கரோனா பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோதனைக்கு பின் அவர்கள் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்ட எல்லையில் வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிரச் சோதனைக்கு பின்னர், வாகனம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்ட்டு அனுமதிக்கப்படுகிறது.
இதையும் படிங்க:முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு 'ஆணழகன்' பட்டம் வழங்கும் காவல் துறை