ETV Bharat / state

கூலி தொழிலாளி மர்ம மரணம்: 24 நாள்களுக்கு பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு! - மயிலாடுதுறை மாவட்டம் செய்திகள்

சீர்காழி அருகே தனியார் செங்கல் சூளையில் மர்மமான முறையில் உயிரிழந்த கூலி தொழிலாளின் உடல் 24 நாள்களுக்கு பின்னர், மறு பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சீனிவாசன்
சீனிவாசன்
author img

By

Published : May 11, 2021, 11:52 AM IST

மயிலாடுதுறை: சீர்காழி அருகே உள்ள நெப்பத்தூரில் தனியார் செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு சீனிவாசன் என்பவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 17ஆம் தேதி, செங்கல்சூளையிலையே சீனிவாசன் தூக்கிட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறி, பிரேத பரிசோதனை முடிந்த சீனிவாசனின் உடலை அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வாங்க மறுத்து, இச்சம்பவம் குறித்து காவல்துறயினரிடம் புகார் அளித்ததோடு, சம்மந்தப்பட்டோர் மீது உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து காவல் துறையினர் செங்கல்சூளை உரிமையாளர் சுரேஷ், அவரது மகன் சித்தார்த், மேற்பார்வையாளர் மோகன்ராஜ் ஆகியோர் மீது, சீனிவாசனை தற்கொலைக்கு தூண்டிதாக வழக்குப்பதிவு செய்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்து, செங்கல் சூளைக்கு சீல் வைத்தனர். பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றபட்டது.

இதனைத் தொடர்ந்து சீனிவாசனின் உறவினர்கள், அவரது உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், பாதிக்கபட்ட நபர்களின் கோரிக்கையை ஏற்று அவர்கள் விரும்பும் மருத்துவர் மூலம் மறுஉடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டனர்.

இதனையடுத்து சீர்காழி அரசு மருத்துவமனையில், சீனிவாசன் உடல் மறுஉடற் கூறாய்வு பரிசோதனை முடிவடைந்தது. பின்னர் அவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டு சொந்த ஊரான நிம்மேலியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சீனிவாசன் மரணம் தொடர்பாக சீர்காழியில் கடந்த 24 நாட்களாக நீடித்த பதற்றம் தற்போது முடிவுக்கு வந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.