ETV Bharat / state

நோன்புக்கான இலவச அரிசியை புறக்கணித்த இஸ்லாமியர்கள்!

நாகை: சீர்காழி தாலுக்கா முழுவதும் 70ஆயிரம் இஸ்லாமியர்கள் அரசு வழங்கிய நோன்பு கஞ்சிக்கான இலவச அரிசியை புறக்கணித்தனர்.

இலவச அரிசியை புறக்கணித்த இஸ்லாமியர்கள்!
இலவச அரிசியை புறக்கணித்த இஸ்லாமியர்கள்!
author img

By

Published : Apr 20, 2020, 6:39 PM IST

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இதற்காக உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்கள் 30 நாள்கள் நோன்பிருந்து, நோன்பு கஞ்சி குடிப்பது வழக்கம். இதற்காக தமிழ்நாடு அரசு வருடா வருடம் இலவச அரிசியை வழங்கவருகிறது.

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா முழுவதும் 25 பள்ளிவாசல்களைச் சேர்ந்த சுமார் 70 ஆயிரம் இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் நோன்புக்கஞ்சி வைப்பதற்காக தமிழ்நாடு அரசு வழங்கிய 60 ஆயிரம் கிலோ அரிசியை வாங்காமல் சீர்காழி தாலுக்கா முழுவதும் உள்ள 25 ஜமாத் நிர்வாகிகள் மற்றும் 70 ஆயிரம் இஸ்லாமியர்களும் புறக்கணித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

தற்போது தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கு காரணம் இஸ்லாமியர்களே எனக் கூறி இஸ்லாமியர்களை ஒடுக்கும் விதமாக சமய வழிபாட்டிற்கு தடைவிதித்து பாரபட்சத்துடன் அரசு செயல்படுவதாகவும், இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகைக்கு காலம் காலமாக நோன்பு கஞ்சி செய்து வழங்குவது வழக்கம். ஆனால் நிகழாண்டு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி வழங்கக்கூடாது எனவும் அதற்கு பதிலாக அரசு வழங்கிய இலவச அரிசியை வீடு வீடாக சென்று இஸ்லாமியர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இலவச அரிசியை புறக்கணித்த இஸ்லாமியர்கள்!

இதனை ஏற்காத ஜமாத்தார்கள் அரசு வழங்கிய அரிசியை வாங்காமல் புறக்கணித்துள்ளனர். மேலும் தடை உத்தரவை மதித்து பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி வழங்காமல் அதற்கு பதிலாக வீடு வீடாக சென்று நோன்பு கஞ்சி வழங்க அரசு ஆணை பிறபிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பார்க்க: நாடு கடத்தலுக்கு எதிரான விஜய் மல்லையாவின் வழக்குத் தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.