ETV Bharat / state

மீன்களை வெட்டிக் கழுவும் வேலை செய்து மகளை மருத்துவராக்கிய வீரத்தாய் - சிறப்புத் தொகுப்பு! - மீன் மார்க்கெட்டில் வேலை செய்து மகளை மருத்துவராக்கிய தாய்

மீன் மார்க்கெட்டில் மீன்களை வெட்டி கழுவி சுத்தம் செய்து சம்பாதித்து மகளை ரஷ்யாவில் படிக்கவைத்து மருத்துவராக்கி அழகுபார்த்த வீரத்தாய் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை காணலாம்.

மீன்களை வெட்டி கழுவும் வேலை செய்து மகளை மருத்துவராக்கிய வீரத்தாய்

author img

By

Published : Jun 1, 2022, 7:49 PM IST

Updated : Jun 1, 2022, 8:20 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை டவுன் எக்டென்ஸன் பகுதியில் வசித்து வருபவர் ரமணி. இவருக்கு ரவிச்சந்திரன் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் வயதான தாய் தையல்நாயகியும் வசித்து வருகிறார். இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி 11 மாத கைக்குழந்தையாக இருக்கும்போது ரமணியின் கணவர் ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு உறவினர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில், குடும்பத்தைக் காப்பாற்ற தனது தாய் தையல்நாயகியுடன் மயிலாடுதுறை மீன் மார்க்கெட்டில் தினந்தோறும் மீன் கறியை வெட்டி, கழுவி சுத்தம் செய்து கொடுக்கும் கூலி வேலைக்குச் சென்றார்.

இருபது ரூபாய் முதல் ஐம்பது ரூபாய் வரை சம்பளம்: மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குபவர்கள் தரும் மீன்களை, உரசி செதில்கள் நீக்கி அதைத் துண்டு துண்டாக வெட்டி சுத்தம் செய்து கொடுப்பது இவரது பணியாகும். இதற்காக இருபது ரூபாய் முதல் ஐம்பது ரூபாய் வரை மீன் வாங்குபவர்கள் கொடுக்கும் பணத்தைப் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தார்.

மீன்களை வெட்டிக் கழுவும் வேலை செய்து மகளை மருத்துவராக்கிய வீரத்தாய்

இந்நிலையில் மூத்த மகன் ரவிச்சந்திரன் ரத்தநாள சுரப்பி குறைபாடு என்ற மருத்துவத்தால் சரிசெய்ய முடியாத நோயினால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக இவர் ஆயுள் முழுவதும் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டி இருந்தது.

இதனால், பத்தாவதுக்கு மேல் படிப்பைத் தொடர முடியாமல் தற்போது வீட்டிலேயே இருக்கிறார். இவருக்கு மருந்து மாத்திரைகளுக்கு மாதத்தில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும் நிலையில், நன்கு படித்து வந்த ஒரே மகளான விஜயலட்சுமி பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவிட்டு, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்தார்.

மகளின் ஆசையை தன் கனவாக நினைத்த தாய்: மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தனது மகளின் ஆசையை நிறைவேற்ற தனது சொந்த வீடு மற்றும் நகைகளை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்தார். தற்போது ரஷ்யாவில் படித்து முடித்து மருத்துவராய், திரும்பியுள்ள மகள் விஜயலட்சுமி, இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற வேண்டிய அங்கீகாரத் தேர்வு எழுத வேண்டியதுள்ளதால், அதற்காக தீவிரக் கல்வியைப் பயின்று வருகிறார்.

வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் இன்னமும் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தம் செய்யும் பணியில் ரமணி ஈடுபட்டு வருகிறார். இருபத்து நான்கு வருடங்களுக்கு முன்பு, தன் கணவர் இறந்ததால் இளமைப்பருவத்தில் பல போராட்டங்களைக் கடந்து, தன் மகளின் மருத்துவப்படிப்புக்காக மீன் மார்க்கெட்டில், மீன் வெட்டி சுத்தம் செய்து தரும் கூலித்தொழிலை இன்னமும் செய்து வருகிறார்.

மூன்று நாய்கள் தான் எங்கள் தெய்வம்: அவர் பல கட்டப் போராட்டங்களை சந்திக்கும்போதெல்லாம் குடும்பத்திற்கு ஆதரவாக தனது வீட்டில் வாயில்லாத ஜீவனாக மூன்று நாய்களை வளர்த்து வருகிறார். அவர்கள்தான் குடும்பத்திற்கும், மானத்திற்கும் பாதுகாவலன் என்று சொல்லி, அந்த நாய்களை தெய்வமாக மதித்து, தினமும் காலை வேலைக்குச்செல்லும்போது, தனது நாய்களைத் தொட்டு வணங்கிய பின்பு வேலைக்குச் செல்கிறார்.

’தனது இரண்டு கைகளை மட்டும் விட்டுவிடு. கைகள் இருந்தால் இன்னும் நாள் முழுக்க பல கஷ்டங்கள் பட்டாலும் மீன்களை வெட்டி சுத்தம் செய்து, தனது பிள்ளைகளைக் காப்பாற்றி, தன் மகளை மருத்துவராக ஒரு இடத்தில் அமர வைத்து தீருவேன்’ என்று கடவுளிடம் சபதம் எடுத்ததுடன் வீரத்தாய் தனது மஞ்சள் பையை எடுத்துக்கொண்டு வேலைக்குச் செல்கிறார்.

ரமணியின் மகள் டாக்டர்: தாயின் கனவு மற்றும் மருத்துவர் கனவை நிறைவேற்றுவதற்காக அங்கீகாரத்தேர்வு எழுதவுள்ள விஜயலட்சுமி வெற்றிபெற வேண்டும் என்பதே அனைவரின் கனவாக உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணி மற்றும் இயந்திர நெல் நடவுப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள மே 31ஆம் தேதி ஆய்வுக்காக வந்திருந்தார்.

அப்போது மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில், மீன் கழுவி சுத்தம் செய்து, தனது மகளை மருத்துவராக்கிய பெண்மணி ரமணி மற்றும் அவரது மகள் விஜயலட்சுமி மற்றும், மகன் ரவிச்சந்திரன் ஆகியோரை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார், முதலமைச்சர் ஸ்டாலின்.

இதையும் படிங்க: மிஸ்டர் ஆசியா ஆணழகன் போட்டிக்குத் தேர்வான 72 வயது மதுராந்தகம் யூத்!

Last Updated : Jun 1, 2022, 8:20 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.