ETV Bharat / state

திருவாவடுதுறையில் தாயும்- கைக் குழந்தையும் உயிரிழப்பு! - மயிலாடுதுறை செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் தாயும், கைக் குழந்தையும் உயிரிழந்தனர்.

குற்றச் செய்திகள்
திருவாவடுதுறையில் தாயும், ஒன்றேகால் வயது மகளும் மர்மமான முறையில் உயிரிழப்பு
author img

By

Published : Mar 18, 2021, 12:41 PM IST

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா, திருவாவடுதுறை மேலக்கடை முடுக்குத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பார்த்திபன். இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் நரசிங்கன்பேட்டையை சேர்ந்த செல்லதுரை மகள் செல்வகுமாரியை (24) காதலித்து, இருவரது பெற்றோர் சம்மதத்துடன் 2019ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு லிவிஷா என்ற ஒன்றேகால் வயது பெண் குழந்தை உள்ளது. அவசரமாக திருமணம் நடைபெற்றதால் செல்வகுமாரிக்கு 3 பவுன் நகை மட்டுமே அவரது பெற்றோர் போட்டுள்ளனர். இதையடுத்து கடந்த சில மாதங்களாக பார்த்திபனின் தாயார் தனலட்சுமி தனது மருமகள் செல்வகுமாரியிடம் 30 பவுன் நகை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் செல்வகுமாரியின் தந்தை செல்லதுரைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கேட்ட வரதட்சணையை உடனடியாக கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் (மார்ச்16) மாலை செல்வகுமாரி பெற்றோரிடம் பேசியுள்ளார். இந்நிலையில் நேற்று (மார்ச்17) காலையும் செல்வகுமாரி வாசல் தெளித்து கோலம் போட்டதை, அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.

இதற்கிடையில் நேற்று மதியம் செல்வகுமாரி வீட்டின் அறையில் உள்ள ஜன்னலில், தூக்கு மாட்டிக்கொண்டு, தரையில் அமர்ந்த நிலையில் மர்மமான முறையில் இறந்துள்ளார். மேலும், அருகில் உள்ள கட்டிலில் செல்வக்குமாரியின், ஒன்றேகால் வயது பெண் குழந்தை லிவிஷாவும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். இந்தத் தகவலின் பேரில் குத்தாலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆனதால் சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தாய், மகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் பறக்கும் படையிடம் சிக்கிய ரூ. 28 லட்சம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.