கரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.
இதனால் நாகப்பட்டினம் மாவாட்டம், சீர்காழி வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எப்போதும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், அவ்விடத்தில் இருக்கும் குரங்குகளுக்கு உணவு வழங்கி வந்தனர்.
இந்நிலையில் தற்போது உணவு கிடைக்காத காரணத்தினால், குரங்குகள் தவித்து மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளன. மேலும் மரங்களில் அமர்ந்து யாரேனும் உணவு தருவார்களா என்று ஏங்கித் தவித்தன. இதையடுத்து உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு, சமூக ஆர்வலர்கள் சிலர் இனைந்து தினந்தோறும் பிஸ்கட், தர்பூசணி போன்ற பழங்களைக் கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவு: குரங்குகளுக்கு, உணவு சமைத்து கொடுத்த காவல் துறையினர்!