ETV Bharat / state

நூதன மோசடி: வரித்துறை அலுவலர்கள் போல நடித்து 60 பவுன் நகை அபகரித்த திருட்டு கும்பல்! - money theft at nagapattinam

நாகை: ஓய்வு பெற்ற நடத்துநரிடம் வருமான வரித்துறை அலுவலர்கள் போல நடித்து, 45 லட்சம் ரூபாய் பணமும், 60 பவுன் நகையும் அபகரிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

theft
நாகை
author img

By

Published : Mar 2, 2021, 1:43 AM IST

நாகையில் பால்பண்ணை சேரி பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன், ஓய்வுபெற்ற நடத்துநர் ஆவர். இவர் விநாயகர் கோவிலை பராமரிக்கும் பணியில் உள்ளார். இவருக்கு கோயிலுக்கு தினந்தோறும் வரும் ராமகிருஷ்ணன் - ராஜேஸ்வரி தம்பதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுப்ரமணியன் பணக்காரர் என்பதால், அவரை ஏமாற்றி பணம் பறிக்க இருவரும் முடிவு செய்துள்ளனர். அவரிடம் தன்னுடைய பூர்வீக சொத்தை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததில், வருமான வரித்துறையிடம் சிக்கியிருக்கும் பணத்தை மீட்க 45 லட்சம் ரூபாய் தேவை எனக் கூறி சுப்ரமணியனிடம் வாங்கியுள்ளனர்.

பின்னர், மேலும் பணம் பறிக்கும் நோக்கில், தனது நண்பர்களை வருமான வரித்துறை அலுவலர்கள் போல் சுப்ரமணியனின் வீட்டிற்கு ராஜேஸ்வரி அழைத்துச் சென்றுள்ளார். வருமான வரித்துறை சீல், அலுவலர்களின் கையெழுத்து உள்ளிட்ட போலி ஆவணங்களை சுப்ரமணியனிடம் காட்டி 60 பவுன் நகைகளை வாங்கிக்கொண்டு அங்கிருந்து அந்த மோசடிக் கும்பலைச் சேர்ந்த அனைவரும் தலைமறைவாகியுள்ளனர்.இதையடுத்து, ஏமாற்றப்பட்ட சுப்ரமணியன் நாகை எஸ்.பி ஓம் பிரகாஷ் மீனாவிடம் புகார் அளித்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், சுப்ரமணியனிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கடலூரில் தாய், மகள் கொலை: உடல் பாகங்களை வெட்டி வீசிய கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.