மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு தெற்கு காலனித்தெரு முதல் மதகடி காட்டுத்தெரு வரையில் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு பல ஆண்டுகளாக சாலைகள் சேதமடைந்து இருந்தன. இதையடுத்து, அச்சாலையை புதுப்பித்து தருமாறு மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினருக்கு கிராமமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 3.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி இன்று (டிச.17) தொடங்கியது. இதற்காக நடைபெற்ற பூமி பூஜையில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பெரியண்ணன் போல் செயல்படும் மத்திய அரசு - திமுக விமர்சனம்!