ETV Bharat / state

புரெவி புயல்: பாதிக்கப்பட்ட கிராமங்களைப் பார்வையிட்ட எம்எல்ஏ! - nagappatinam district news

நாகப்பட்டினம்: புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பூம்புகார் தொகுதிக்குட்பட்ட கிராமங்களை சட்டப்பேரவை (எம்எல்ஏ.,) பவுன்ராஜ் ஆய்வு செய்தார்.

பாதிக்கப்பட்ட கிராமங்களைப் பார்வையிட்ட எம்எல்ஏ.,

author img

By

Published : Dec 5, 2020, 7:18 PM IST

புரவி புயல் காரணமாக பெய்யும் தொடர் கனழையால் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் பெரிதும் பாதிப்படைந்தன.

கஞ்சாநகரம் ஊராட்சியில் பொண்ணுக்குடி, மங்களூர் கிராமங்களில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட 600க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள தேவாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,பூம்புகார் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்டார். தொடர்ந்து பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளனவா என்று ஆய்வு மேற்கொண்டார்.

பாதிக்கப்பட்ட கிராமங்களைப் பார்வையிட்ட எம்எல்ஏ.,

இதேபோல் கருவாழக்கரை ஊராட்சியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அப்பறப்படுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: அலட்சியத்தால் நேர்ந்த விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய குழந்தைகள்..பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.