ETV Bharat / state

"சாதாரண கிளை செயலாளரைக் கூட தொட முடியாது" - மத்திய அரசுக்கு அமைச்சர் உதயநிதி சவால்! - nagapattinam news

மயிலாடுதுறையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில் திமுகவை எவராலும் அடிமைபடுத்த முடியாது என கூறினார்.

sports minister udhayanithi
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
author img

By

Published : Jun 21, 2023, 9:30 PM IST

அமைச்சர் உதயநிதி மேடையில் பேசிய வீடியோ

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் அவர்களின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு இந்த வருடம் முழுவதும் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.இதை முன்னிட்டு கழகத்தின் மூத்த முன்னோடி உறுப்பினர்களுக்குப் பொற்கிழி வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மயிலாடுதுறையில் நடைப்பெற்றது.இவ்விழா மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் திமுக மூத்த முன்னோடி உறுப்பினர்கள் ஆயிரம் பேருக்குப் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொற்கிழியை வழங்கினார்.மேலும் மாற்றுத்திறனாளி 60 நபர்களுக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் 300 பெண்களுக்குத் தையல் மிஷின் இயந்திரங்களை வழங்கி சிறப்பித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி மேடையில் பேசுகையில்: "நான் சென்னையில் பிறந்தேன். என்னுடைய தாய் மாவட்டம் மயிலாடுதுறை.கடந்த சட்டமன்ற தேர்தலின் பிரச்சாரத்தின் போது என் பிரச்சார வாகனத்தைத் தடுத்து நிறுத்தி என்னைக் கைது செய்ததும் மயிலாடுதுறையில் தான்.திமுக தலைமையிலான முதல்வர் ஆட்சி மக்களுக்குச் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இதைப் பொறுக்க முடியாத ஒன்றிய அரசு என்ன செய்வது என்று தெரியாமல் அமலாக்கத்துறை,வருமான வரித்துறை, சிபிஐ மூலம் திமுக அரசை பயமுறுத்தி வருகின்றனர்.நாங்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தைச் சந்தித்தவர்கள் மேலும் அமலாக்கத்துறை மற்றும் மோடி இவர்களைப் பார்த்துப் பயப்படமாட்டோம் என்றார்.

நமது முதல்வர் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒன்றிய அரசை எதிர்ப்பதால் தான் பாஜக தலைமையிலான மோடி அரசு திமுகவிற்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது.ஒன்றிய அரசு மற்றும் அதிமுகவினரால் திமுகவில் உள்ள சாதாரண கிளை செயலாளரைக் கூட தொட முடியாது எனச் சவால் விட்டார்.

தமிழக ஆளுநர் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை விட்டுவிட்டு அனைத்து வேலைகளையும் பார்க்கிறார்.மேலும் அவர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றும் எண்ணத்தில் இருப்பதாகவும்,ஆளுநருக்கு எதிராகத் தைரியமாகக் குரல் கொடுத்தவர் நமது முதல்வர் என தெரிவித்தார்.உலகின் பணக்கார பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் அதானி. அதானியும் ,மோடியும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் மேலும் மோடி உலகின் எந்த நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் விமானி இல்லாமல் கூட சென்று விடுவார் ஆனால் அதானி இல்லாமல் செல்லவே மாட்டார்” என விமர்சித்தார்.

ஒன்றிய அரசு அதிமுகவை தங்கள் அடிமை கட்சிகளாக வைத்துள்ளது.அதேபோல் திமுகவையும் அடிமைப்படுத்த நினைக்கிறது அது நடக்காது என்றார்.மேலும் இவ்விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:"யோகாவை பிரபலப்படுத்தியதில் நேருவுக்கே முக்கியப் பங்கு" - காங்கிரஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.