ETV Bharat / state

சசிகலா அதிமுகவிற்கு தலைமை ஏற்பாரா? - ஓஎஸ்.மணியன்!

நாகை: சசிகலா அதிமுகவிற்கு தலைமை ஏற்பாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு சிறையில் இருந்து அவர் வெளியில் வந்தால் பார்க்கலாம் என அமைச்சர் ஓஎஸ்.மணியன் பதிலளித்தார்.

author img

By

Published : Oct 31, 2019, 6:28 PM IST

Minister O.S.Maniyan responded very well, செய்தியாளர் கேள்விக்கு சூசகமாக பதிலளித்த அமைச்சர் ஓஎஸ்.மணியன்

இன்று நாகையில் சமூகநலத்துறை சார்பில் ஏழை பெண்கள் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு கைத்தறித் துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், தலைஞாயிறு, திருமருகல், கீழையூர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த ஆயிரத்து 343 பயனாளிகளுக்கு 9 கோடியே 23 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தாலி, திருமண உதவி தொகையினை கைத்தறித் துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் வழங்கினார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ஓஎஸ்.மணியன், 'அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்றும், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் விரைந்து பணிக்கு திரும்புவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்திற்கு காவிரி நீர் பெறுவதில் சட்ட வரையறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட சிக்கல் ஏற்பட்டால் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடும் என்று கூறினார்.

செய்தியாளர் கேள்விக்கு சூசகமாக பதிலளித்த அமைச்சர் ஓஎஸ்.மணியன்

தொடர்ந்து, சசிகலா அதிமுகவிற்கு தலைமை ஏற்பாரா என்ற கேள்விக்கு, முதலில் அவர் சிறையிலிருந்து வெளியில் வரட்டும் வந்த பிறகு பார்த்து கொள்ளலாம்' என்று சூசகமாக பதில் அளித்தார்.

நிகழ்ச்சியில் நாகை எம்.பி செல்வராசு, மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல்' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்!

Intro:சசிகலா அதிமுக தலைமை ஏற்பாரா? ; சிறையில் இருந்து அவர் வெளியில் வந்தால் பார்க்கலாம் ; சூசகமாக பதிலளித்த அமைச்சர் ஓஎஸ்.மணியன்.Body:சசிகலா அதிமுக தலைமை ஏற்பாரா? ; சிறையில் இருந்து அவர் வெளியில் வந்தால் பார்க்கலாம் ; சூசகமாக பதிலளித்த அமைச்சர் ஓஎஸ்.மணியன்.

நாகையில் சமூகநலத்துறை சார்பாக தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை எம்.பி செல்வராசு, மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், தலைஞாயிறு, திருமருகல், கீழையூர் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 1343 பயனாளிகளுக்கு 9 கோடியே 23 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான
தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி தொகையினை கைத்தறி துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஓஎஸ்.மணியன், மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும் மருத்துவமனைகளில் நோயாளிகள் கவனிக்கபடுகிரார்கள் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் விரைந்து பணிக்கு திரும்புவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்திற்கு காவிரி நீர் பெறுவதில் சட்ட வரையறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட சிக்கல் ஏற்பட்டால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடும் என்று கூறினார்.
சசிகலா வெளியில் வந்தால் அதிமுகவில் பொறுப்புக்கு வருவாரா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்,
வந்தால் பார்த்து கொள்ளலாம் என்று சூசகமாக பதில் அளித்தார்.

பேட்டி ; ஓஎஸ்.மணியன், கைத்தறி துறை அமைச்சர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.