ETV Bharat / state

'தமிழருவி மணியன் ஒரு தொகுதியில் வென்றுவிட்டு பேசட்டும்' - ஓ.எஸ். மணியன்! - DMK - ADMK

நாகை: தமிழ்நாட்டிலிருந்து இரு திராவிடக் கட்சிகளும் அகற்றப்படவேண்டும் என கூறும் தமிழருவி மணியன் ஒரு தொகுதியில் நின்று வென்று விட்டு பேசட்டும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.

Minister O.S.Manian Hits Back Tamilaruvi Manian
Minister O.S.Manian Hits Back Tamilaruvi Manian
author img

By

Published : Nov 26, 2019, 7:59 AM IST

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே தனியார் பேருந்து விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களைச் சந்தித்து கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆறுதல் கூறினார்.

விபத்தில் காயமடைந்தவர்களைப் பார்த்த அமைச்சர்

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ' நடிகர் சங்கத் தேர்தலில் நியாயமான முடிவை ஏற்படுத்த முடியாத மூத்த நடிகர்களால் எப்படி நாட்டை வழிநடத்த முடியும். அதேபோல் நடிகர் சங்கக் கட்டடத்தை திருப்தியாக கட்ட முடியாத நடிகர்கள் நாட்டைத் திருத்த வருகிறேன் என்பது வேடிக்கையாக உள்ளது' என நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோரை மறைமுகமாக சாடினார்.

ஓ.எஸ்.மணியன் செய்தியாளர் சந்திப்பு

மேலும் தமிழ்நாட்டிலிருந்து இரு திராவிட கட்சிகளும் அகற்றப்படவேண்டும் என கூறும் தமிழருவி மணியன், ஒரு தொகுதியில் ஆவது நின்று வென்றுவிட்டு பேசட்டும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: மத்திய அமைச்சர்களைச் சந்தித்த தமிழ்நாடு அமைச்சர்கள்!

Intro:நடிகர் சங்க தேர்தலை ஒழுங்காக நடத்தி நியாயமான முடிவை ஏற்படுத்த முடியாத மூத்த நடிகர்கள், எப்படி நாட்டை வழிநடத்த முடியும் என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கேள்வி: Body: நடிகர் சங்க தேர்தலை ஒழுங்காக நடத்தி நியாயமான முடிவை ஏற்படுத்த முடியாத மூத்த நடிகர்கள், எப்படி நாட்டை வழிநடத்த முடியும் என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கேள்வி:

நாகை மாவட்டம் , தலைஞாயிறு அருகே நேற்று தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களை இன்று சந்தித்த தமிழக கைத்தறித்துறை மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ. எஸ். மணியன் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ் மணியன்,நடிகர் சங்க தேர்தலை ஒழுங்காக நடத்தி நியாயமான முடிவை ஏற்படுத்த முடியாத மூத்த நடிகர்கள், எப்படி நாட்டை வழிநடத்த முடியும் என கேள்வி எழுப்பினார். மேலும் நடிகர் சங்க கட்டிடத்தை திருப்தியாக கட்ட முடியாத நடிகர்கள், நாட்டை திருத்த வருகிறேன் என்பது வேடிக்கையாக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் மீது அமைச்சர் ஓ. எஸ். மணியன் மறைமுகமாக சாடினார்.

அதிமுக அரசு தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறது என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு கூறிய கருத்துக்கு, பதில் அளித்த கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் , இகழ்ந்தால் கோபமும், மகிழ்ந்தால் மகிழ்ச்சியும் அடைபவர்கள் அதிமுக காரர்கள் அல்ல என்றார்:

தமிழகத்திலிருந்து இரு திராவிட கட்சிகளும் அகற்றப்பட வேண்டுமென கூறும் தமிழருவி மணியன், ஒரு தொகுதியில் நின்று வென்று காட்டி விட்டு பேசினால் பார்ப்போம் என அமைச்சர் ஓ. எஸ் மணியன் கூறினார்.

பேட்டி : ஓ.எஸ்.மணியன். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.