நாகை மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இன்று (செப்.07)நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர்களுக்கான விருதை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
பின்னர் அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறுகையில், "தமிழ்நாடு பட்ஜெட்டில் அதிக நிதி கல்வித்துறைக்கு ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பள்ளித் தேர்ச்சி விகிதத்தில் நாகை மாவட்டம் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த நிலை மாற ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும். ஆசிரியர்கள் பாடங்களை மட்டும் கற்பிப்பவராக அல்லாமல், பன்முகத் திறமை கொண்டவர்களாக விளங்க வேண்டும்.
அதுமட்டுமின்றி தற்போது நாளுக்கு நாள் புதிய கண்டுபிடிப்புகளையும், ஆராய்ச்சிகளையும் ஆசியர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் மாணவர்களை திறமையானவர்களாக உருவாக்க முடியும். ஆசிரியர்களுக்கே தெரியவில்லை என்றால் மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது" என்றார்.