நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள ஆவின் பாலகத்தை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் இன்று (நவ.13) திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இதுவரை சரியாக பெய்யவில்லை. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் மழையினை எதிர்பார்த்துள்ளனர்.
மழையினால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நாகை மண்டலத்திற்குத் தேர்தல் பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன்.
நாகை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி இம்முறை வெற்றிபெறும்” எனத் தெரிவித்தார். மேலும், திமுகவின் பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகம் குறித்த கேள்விக்கு அவர்,, “மு.க. ஸ்டாலினின் அப்பா கருணாநிதியையே பலமுறை வென்ற எங்களுக்கு, ஸ்டாலின் ஒரு பொருட்டல்ல” என பதிலளித்தார்.
இதையும் படிங்க: அமைச்சர் துரைக்கண்ணு இறப்பில் என்ன மர்மம்? - ஸ்டாலினுக்கு முதலமைச்சர் கேள்வி!