வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடைந்து கரையை நோக்கி நகர்வதால், நாகை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன்படி புயல் பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதிகளில் இன்று (நவ. 23) தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆய்வு மேற்கொண்டார்.
வேதாரண்யம், புஷ்பவனம், செருதூர், நம்பியார் நகர், நாகூர் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்ற அவர் மீனவர்களை, அவர்களது படகுகளை மேடான பகுதிகளுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார். மேலும் புயல் வீசக்கூடிய நேரத்திற்கு முன்னதாக விவசாயிகள், தாழ்வான குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் ஆகியோர் புயல் பாதுகாப்பு கட்டடங்களுக்குச் செல்ல வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள நாகை மாவட்டத்தில் வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தினால், அதனை எதிர்கொள்ள அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் 24 மணி நேரமும் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: நிவர் புயல் முன்னெச்சரிக்கை - அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய தமிழ்நாடு முதலமைச்சர்!