ETV Bharat / state

'நெசவாளர்களின் வாழ்வை காக்க தீபாவளிக்கு கைத்தறி உடைகளை வாங்குங்கள்' - அமைச்சர் வேண்டுகோள் - co optex products

நாகப்பட்டினம்: கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க, கைத்தறி துணி ரகங்களை வாங்க வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

நெசவாளர்களின் வாழ்வை காக்க கைத்தறி ரகங்களை வாங்க வேண்டும் -ஓஎஸ் மணியன்!

author img

By

Published : Oct 19, 2020, 7:40 AM IST

நாகப்பட்டினத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ‌எஸ் மணியன் நேற்று (அக்.18) குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டுப் புடவைகள், ஆடைகளை பார்வையிட்ட அமைச்சர் மற்றும் நாகை மக்களவை உறுப்பினர் செல்வராசும் இணைந்து தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்‌. மணியன், “ 2019ஆம் ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் மூலம் 240 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 218 கோடி ரூபாய் அளவில் வருமானம் ஈட்டப்பட்டது. ஆனால், இவ்வாண்டு கரோனாவால் கோ-ஆப்டெக்ஸ் கடைகள் மூடப்பட்டதால் பெரும் வர்த்தக இழப்பை சந்தித்துள்ளது.

அமைச்சர் ஓ.எஸ் மணியன் செய்தியாளர் சந்திப்பு

இதனால் கரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நெசவாளர்களுக்கு உதவிடும் வகையில், மக்கள் தீபாவளி திருநாளில் பண்டிகைக்கு கைத்தறி ஆடைகளை வாங்கி உடுத்த வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க...களைகட்டிய நவராத்திரி: மந்தமாக இருக்கும் கொலு பொம்மைகள் விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.