ETV Bharat / state

கோ-ஆப் டெக்ஸ் புடவைகளில் நெசவாளர்களின் பெயர், புகைப்படங்கள் அறிமுகம்!

author img

By

Published : Sep 18, 2019, 10:18 PM IST

நாகை: கோ-ஆப் டெக்ஸில் விற்பனையாகும் கைத்தறி துணிகளில் நெசவாளர்களின் பெயர், புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும் திட்டத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் அறிமுகம் செய்துவைத்தார்.

Minister os manian

கைத்தறி கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப் டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நாகையில் இன்று தொடங்கி வைத்தார். தீபாவளி விற்பனைக்காக காஞ்சிபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களின் பட்டு, காட்டன், பருத்தி சேலைகள் உள்ளிட்ட ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி கோ-ஆப் டெக்ஸில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை விற்பனை நிலையத்திற்கு இந்த ஆண்டிற்கு ஒன்றரைக் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யபட்டு முதல் விற்பனையை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, தமிழ்நாடு முழுவதும் 2018ஆம் ஆண்டு 275 கோடி ரூபாய் கோ-ஆப் டெக்ஸில் துணிகள் விற்பனை செய்யபட்டு இருப்பதாகவும், இந்த ஆண்டு 325 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யபட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், கைத்தறி புடவைகளில் நெசவாளர்களின் புகைப்படத்துடன் பெயர், நெய்தல் விவரங்கள் குறித்த அட்டை இடம் பெறும் திட்டத்தையும் அறிமுகம் செய்தார். இதைவைத்து புடவைகளின் உறுதித்தன்மை, உத்திரவாதத்தோடு, நெய்தவரின் விவரம் அறியமுடியும் என்றும் கூறினார். இதன்மூலம் தரம் குறைவான போலியான புடவைகள் விற்பனையில் இடம்பெறுவது குறையும் என்றும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் நம்பிக்கை தெரிவித்தார்.

அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேட்டி

இந்நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டப்பேரவை உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:

நாகையில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு!

Intro:கைத்தறி துணிகளில் நெசவாளர்களின் பெயர் புகைப்படங்கள் அறிமுகம் ; தமிழகத்திற்கு 325 கோடி ரூபாய் விற்பனை இலக்கு ; தீபாவளி விற்பனையை தொடங்கிவைத்த கைத்தறி துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் பேட்டி.Body:கைத்தறி துணிகளில் நெசவாளர்களின் பெயர் புகைப்படங்கள் அறிமுகம் ; தமிழகத்திற்கு 325 கோடி ரூபாய் விற்பனை இலக்கு ; தீபாவளி விற்பனையை தொடங்கிவைத்த கைத்தறி துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் பேட்டி.

கைத்தறி கூட்டுறவு நிறுவனமான கோ - ஆப்-டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை கைத்தறி துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் நாகையில் இன்று தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு தீபாவளி விற்பனைக்காக காஞ்சிபுரம் பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், பருத்தி சேலைகள் உள்ளிட்ட ரகங்களுக்கு 30 % தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை விற்பனை நிலையத்திற்கு இந்த ஆண்டிற்கு ஒன்றரைக் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யபட்டு முதல் விற்பனையை அமைச்சர் ஓஎஸ்.மணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்த்திது பேசிய அமைச்சர் கூறியதாவது ; தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 275 கோடி ரூபாய் கோ ஆப்டெக்ஸ் விற்பனை செய்யபட்டு இருப்பதாகவும், இந்த ஆண்டு தமிழகத்திற்கு 325 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யபட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு கைத்தறி புடவைகளில் நெசவாளர்களின் புகைப்படத்துடன் பெயர் மற்றும் நெய்தல் விவரங்கள் அறிமுகம் செய்யபட்டு இருப்பதாகவும், இதன்மூலம் புடவைகளின் உறுதி தன்மை, உத்திரவாதம், நெய்தவரின் விவரம் அறியமுடியும் என்றும், தரம் குறைவான போலியான துணிகள் விற்பனையில் இடம்பெற வாய்ப்பு இல்லை என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

பேட்டி ; ஓஎஸ்.மணியன், கைத்தறி துறை அமைச்சர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.