ETV Bharat / state

'திமுகவுக்கு வாக்களித்தால் நலத்திட்டங்கள் வீடு வந்துசேரும் - மெய்யநாதன் பரப்புரை - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022

திமுக வேட்பாளருக்கு வாக்களித்தால் முதலமைச்சரின் நலத்திட்டங்கள் உங்கள் வீடுகளுக்கு வந்துசேரும், எதிர்க்கட்சியினருக்கு வாக்களித்தால் அவர்களது வீடுகளுக்குச் சென்று சேர்ந்துவிடும் எனக் கூறி அமைச்சர் மெய்யநாதன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

minister meyyanathan election campaign at mayiladuthurai
அமைச்சர் மெய்யநாதன்
author img

By

Published : Feb 14, 2022, 2:33 PM IST

மயிலாடுதுறை: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் நேற்று (பிப்ரவரி 13) தனது பரப்புரையை மயிலாடுதுறையில் தொடங்கினார்.

மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட வார்டுகள், மணல்மேடு பேரூராட்சியில் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்குச் சேகரித்தார்.

அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை நகராட்சி 29ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரஜினியை ஆதரித்து சித்தர்காடு பகுதியில் மெய்யநாதன் பேசியதாவது, ”முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியாவே போற்றக்கூடிய நேர்மையான ஆட்சியைத் தந்துவருகிறார்.

மயிலாடுதுறை நகராட்சியின் முக்கியமான பிரச்சினையாக உள்ள பாதாள சாக்கடைத் திட்டம் மீண்டும் புதிதாக ஏற்படுத்தப்படும். பொறுப்பேற்ற எட்டு மாதங்களில் மயிலாடுதுறையில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரூ.36 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைக்க முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மயிலாடுதுறையில் விரைவில் புறவழிச்சாலை அமைக்கப்படும். திமுக வேட்பாளருக்கு வாக்களித்தால் முதலமைச்சரின் நலத்திட்டங்கள் உங்கள் வீடுகளுக்கு வந்துசேரும். எதிர்க்கட்சியினருக்கு வாக்களித்தால் அவர்களது வீடுகளுக்குச் சென்று சேர்ந்துவிடும்” என்றார்.

இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் விநியோகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.