ETV Bharat / state

குடியுரிமை திருத்த சட்டம்: எம்ஜிஆர் கலை கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

நாகை: மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி எம்ஜிஆர் கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஆர்பாட்டம்  எம்ஜிஆர் கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்  mgr arts college students protest against caa in nagapatinam  சீர்காழி அரசுக்கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்  mgr arts college protest  seerkaali arts college student protest
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி எம்ஜிஆர் கலை கல்லூரி மாணவர்கள் போராட்டம்
author img

By

Published : Dec 18, 2019, 3:51 PM IST

நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள புத்தூரில் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரி மாணவர்கள், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் அக்கல்லூரியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட மாணவர்கள் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி எம்ஜிஆர் கலை கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மேலும், மக்களை பிளவுப்படுத்தக்கூடிய வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளதாகவும், இந்த சட்டம் இஸ்லாமிய மற்றும் ஈழ தமிழர்களுக்கு எதிராக உள்ளதாகவும் தெரிவித்த மாணவர்கள் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சென்னை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை!

Intro:சீர்காழி அருகே குடியுரிமை மசோதா திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எம்ஜிஆர் கலைக் கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்:-Body:நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை கல்லூரி மாணவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை மசோதா திருத்தச்சட்டத்தை கண்டித்து வகுப்புகளைப் புறக்கணித்து 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எம்ஜிஆர் கலை கல்லூரி அனைத்து துறை மாணவர்கள் பங்கேற்றனர். மத்திய அரசை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை மசோதா திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். மத்திய அரசு மக்களை பிளவுபடுத்த கூடிய குடியுரிமை மசோதா திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி உள்ளதாகவும் இந்த சட்டம் நிறைவேற்றி உள்ளதால் இஸ்லாமிய மற்றும் இலங்கைவாழ் தமிழர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது எனவே மத்திய அரசு உடனடியாக இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என இந்திய மாணவர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.