குறுவை சாகுபடிக்காக நடப்பாண்டு மேட்டூரிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இதனால் கடைமடைப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் குறுவை சாகுபடிப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
காவிரியில் தண்ணீர் இல்லாமல், கடந்த 8 ஆண்டுகளாக மேட்டூரிலிருந்து தாமதமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி செய்யாத ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள், இந்த ஆண்டு குறுவை சாகுபடிப் பணிகளை தொடங்கியுள்ளனர். மின்மோட்டார் வைத்துள்ள விவசாயிகளிடம் நிலத்தடிநீரைப் பெற்று, தற்போது மயிலாடுதுறை சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் நிலத்தை தயார் செய்து சமன்படுத்தியும், நாற்றுக்களைத் தயார் செய்தும் நடவுப் பணிகளைத் தொடங்கியும் உள்ளனர்.
கடைமடைப் பகுதியான நாகப்பட்டினம், மயிலாடுதுறைப் பகுதிகளில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 2 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. நிகழாண்டு குறிப்பிட்ட தேதியில் மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படவுள்ளதால், நிலத்தடிநீர் மற்றும் ஆற்றுப்பாசனம் மூலம் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய மாவட்ட நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கினை மேட்டூரில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே எட்டமுடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 4% வட்டியிலான நகைக்கடனை வழங்காமல், இந்த ஆண்டு நிறுத்தி வைத்துள்ளதாகவும், உடனடியாக வங்கிகளில் விவசாயிகளுக்கு நகைக்கடன் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க...கட்டுப்பாடுகளை மீறினால் முகாமில் அனுமதி- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்