மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் ஊராட்சியில் உள்ள வடக்கு, தெற்கு தாமரைக் குளங்களுக்கு தடுப்புச்சுவர், நீர்வழி மதகு ஆகியவை பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 9.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயிலில் புதுப்பிக்கப்பட்ட நுழைவு வாயிலைத் திறந்து வைத்தார்.
அக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற கரோனா பரிசோதனை சிறப்பு முகாமினை பார்வையிட்டு அனைவரும் தகுந்த இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரமோகன், வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார், மருத்துவர்கள், செவிலியர், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் - பூம்புகார் எம்எல்ஏ
மயிலாடுதுறை: ஆக்கூர் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்ட பணிகளை பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் தொடங்கி வைத்தார்.