ETV Bharat / state

பள்ளி அருகே இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் வேதனை - near school

நாகை: நகராட்சி பள்ளி அருகே கொட்டப்படும் மாட்டிறைச்சி கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இறைச்சி கழிவு குவியல்கள்
author img

By

Published : May 14, 2019, 11:08 PM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை டவுன் பகுதியில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் பின்புறம் உள்ள சாலையில் அந்த பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் குப்பையை கொட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பள்ளி அருகே இறைச்சி கழிவு குவியல்கள்

குறிப்பாக, இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:மயிலாடுதுறை நகராட்சி பள்ளி அருகே கொட்டப்படும் மாட்டிறைச்சி கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு:-

Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளி பின்புறம் ஆபரண சந்து எனப்படும் சாலை உள்ளது. இப்பாதை மாயூரநாதர் ஆலயத்திலிருந்து சின்னக்கடை தெரு, மாயூரம் கூட்டுறவு வங்கி சாலை, நாராயண பிள்ளை தெரு வழியே சென்று காவிரி துலா கட்டத்தில் முடிவடைகிறது. இந்த பாதையில் குடியிருப்புவாசிகள் மற்றும் வியாபாரிகள் குப்பைகளை கொட்டுவது பகுதி குப்பை மேடாக காட்சி அளிப்பதுடன் மாட்டுத்தலை, கால்கள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் இந்த சாலையை பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.