கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக, பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் தமிழ்நாடு முழுவதும் இன்று திறக்கப்பட்டுள்ளன. இதில் மது விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மது கடைகளைத் திறக்க அனுமதித்த தமிழ்நாடு அரசைக் கண்டித்து நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் சங்க கட்டட வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவருமான ஜெக.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசைக் கண்டித்தும்; மது விற்பனை செய்வதைத் தடை செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க...விசாகப்பட்டினம் வாயு கசிவு: தகவல்கள் உடனுக்குடன்