ETV Bharat / state

30 ஆண்டுகளாக வாக்குறுதியை நிறைவேற்றாத மயிலாடுதுறை எம்.பிக்கள்

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை- தரங்கம்பாடி இடையேயான ரயில் பாதை அமைக்கப்படும் என 30 ஆண்டுகளுக்கு மேலாக வாக்குறுதி கொடுக்கும் அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அதனை நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

author img

By

Published : Apr 8, 2019, 7:01 PM IST

நிறைவேறுமா மயிலாடுதுறை- தரங்கம்பாடி ரயில் பாதை

மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையேயான 30 கி.மீ. ரயில் போக்குவரத்து 1926 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பலடைந்தனர். மயிலாடுதுறை செம்பனார்கோவில், பொறையார், தரங்கம்பாடி வழியாக இயக்கப்பட்ட ரயில் சேவை, 1986 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. 60 ஆண்டுகளாக மக்களின் பயன்பாட்டில் இருந்த இந்த ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் 33 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். திமுக, அதிமுக, காங்கிரஸ் என எந்த கட்சியை சேர்ந்தவர்கள் வந்தாலும் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து நாடாளுமன்ற உறுப்பினராக ஆன பிறகு அதனை நிறைவேற்றவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2016 -17 ரயில்வே பட்ஜெட்டில், 117 கோடி ரூபாய் செலவில் மயிலாடுதுறை தரங்கம்பாடி இடையிலான ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கு மத்திய அரசு திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கான நிதி ஒதுக்காததால் தற்போது இந்த திட்டம் கிடப்பில் உள்ளது. இந்த முறை மயிலாடுதுறை- தரங்கம்பாடி ரயில் பாதை குறித்து உறுதியான வாக்குறுதி அளிப்பவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கப்படும் என்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பர் சுந்தரம், சமூக ஆர்வலர், மயிலாடுதுறை.

Intro:மயிலாடுதுறை தரங்கம்பாடி இடையேயான ரயில் சேவையை மீண்டும் கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை. 30 ஆண்டுகளுக்கு மேலாக வாக்குறுதி அளித்து நிறைவேற்றாத மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர்கள்

Body:மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையேயான 30 கி.மீ. ரயில் போக்குவரத்து 1926 ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு பள்ளி கல்லூரி மற்றும் வணிகர்களின் பயன்பாட்டிற்காக இருந்து கொண்டிருந்தது. மயிலாடுதுறை செம்பனார்கோவில், பொறையார், தரங்கம்பாடி வழியாக இயக்கப்பட்ட ரயில் சேவை மக்களின் நலனுக்காக என்ற பெயரில் 1986 ம் ஆண்டு மத்திய அரசு மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில் சேவையை நிறுத்திவிட்டது. 60 ஆண்டுகளாக மக்களின் பயன்பாட்டில் இருந்த இந்த ரயில் சேவை கடந்த 33 ஆண்டுகளாக மேலாக பொதுமக்கள், மாணவர்கள், வணிகர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் மயிலாடுதுறை தரங்கம்பாடி இடையேயான ரயில் போக்குவரத்து தொடங்குவதற்காக பல போராட்டங்களை நடத்தி வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மத்திய அரசு 2016 - 17 ரயில்வே பட்ஜெட்டில் மயிலாடுதுறை தரங்கம்பாடி இடையிலான ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கு ரூ.117 கோடியில் திட்டமிடப்பட்டது ஆனால் அதற்கான நிதி ஒதுக்காததால் தற்போது இந்த திட்டம் கிடப்பில் உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினரான திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளாக அளித்து பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக ஆன பிறகு மயிலாடுதுறை தரங்கம்பாடி இடையேயான ரயில் சேவை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மயிலாடுதுறை தரங்கம்பாடி இடையேயான ரயில் போக்குவரத்துக்கான இயக்க தற்போது வேட்பாளர்கள் உறுதியான வாக்குறுதி அளிப்பவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கப்படும் என்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பேட்டி : அப்பர் சுந்தரம். சமூக ஆர்வலர், மயிலாடுதுறை.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.