ETV Bharat / state

கடையின் சுவரில் துளையிட்டு ரூ.10 ஆயிரம் திருட்டு; சிசிடிவி கேமராவும் அபேஸ்!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே இரண்டு கடைகளின் சுவரில் துளையிட்டு பத்தாயிரம் ரூபாய் திருடியதோடு அங்கிருந்த சிசிடிவி கேமராவையும் அடையாளம் தெரியாத நபர்கள் எடுத்துச் சென்றனர்.

theft
theft
author img

By

Published : Aug 23, 2020, 2:23 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுரு, அதே பகுதியில் பிரதானசாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இதேபோல பாலகுரு மருமகள் விஜயலக்ஷ்மி அடகு கடை வைத்துள்ளார்.

ஒருவருக்கொருவர் அருகாமையிலே கடைகளை நடத்தி வருகின்றனர். இருவரும் வழக்கம்போல் கடைகளை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர். பின்னர் கடையை திறந்தபோது இரண்டு கடைகளிலும் சுவர் துளையிட்டு உடைந்து கிடப்பதைப் பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாலகுரு, மளிகை கடையில் பத்தாயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக விஜயலக்ஷ்மியின் அடகு கடையில் தங்க நகைகள், பணம் எதுவும் வைக்கவில்லை. கடையில் இருந்த சிசிடிவி கேமராவை மட்டும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாலகுரு, விஜயலக்ஷ்மி இருவரும் பாகசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கை ரேகைகளை பதிவு செய்தும், மோப்ப நாய் வர வைத்தும் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தி.மலை வனப்பகுதியில் பலத்த காயங்களுடன் ஆண் சடலம் கண்டெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.