ETV Bharat / state

மயிலாடுதுறை பாதாளச் சாக்கடைத் திட்டம் - மீண்டும் பள்ளம்! - nagapattinam district news

நாகை: மயிலாடுதுறை நகராட்சியில் செயல்படுத்தப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் சாலையில் 13ஆவது முறையாக ஏற்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

mayiladuthurai sewer problem
author img

By

Published : Nov 20, 2019, 11:07 AM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியால் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லும், பாதாளச் சாக்கடைக் குழாய்களில் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் 20 அடி ஆழத்திற்குத் திடீர் பள்ளம் ஏற்படுவது தொடர் கதையாகி உள்ளது.

இதனால் பாதாளச் சாக்கடை கழிவு நீர் பல்வேறு வீதிகளில் வழிந்தோடுகிறது. இதனால், பொதுமக்கள் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். பாதாளச் சாக்கடை குறித்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தலைமையில் வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில்,மேலும் சாலைகளில் ஒரு சில இடங்களில் பள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆட்சியர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு தரங்கம்பாடி சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த லாரி பள்ளத்தில் சிக்கியது. இதையடுத்து லாரி அங்கிருந்து அகற்றப்பட்டு, பள்ளத்தைச் சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. பாதாளச் சாக்கடையால் மயிலாடுதுறை நகர மக்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பாதாளச் சாக்கடையால் மயிலாடுதுறை சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்

பாதாளச் சாக்கடை அமைக்கப்பட்டதில் உள்ள குறைபாடுகளை அரசு போர்க்கால அடிப்படையில் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசு கலைக்கல்லூரி புதிய கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

Intro:மயிலாடுதுறை நகராட்சியில் பொது சுகாதாரத்தை சீரழிக்கும் பாதாள சாக்கடை. சாலைகளின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஏற்படும் பள்ளங்களால் பொதுமக்கள் அவதி. 13-வது முறையாக ஏற்பட்ட பள்ளத்தால் பாதிப்பு:-
Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நகராட்சியால் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடைத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாக செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்த நிலையில், கடந்த 1 வருடத்திற்கு மேலாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் பாதாளசாக்கடை குழாய்களில் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் 20 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுவது தொடர்கதையாக உள்ளது. இதனால் பாதாளசாக்கடை கழிவுநீர் பல்வேறு வீதிகளில் வழிந்தோடுகிறது. ஆறுகள் வாய்கால்கள் குளங்களிலும் சாக்கடைநீர் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மர்ம காய்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பாதாளசாக்கடை குறித்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவின் பி. நாயர் தலைமையில் வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டது. இதில் மேலும் ஒருசில இடங்களில் சாலைகளில் பள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆட்சியர் குறிப்பிட்டிருந்தார். இந்நிiயில் நேற்று இரவு தரங்கம்பாடி சாலையில் திடீர் பள்ளம் எற்பட்டது. அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த லாரி பள்ளத்தில் சிக்கியது. இதையடுத்து, லாரி அங்கிருந்து அகற்றப்பட்டு, சாலையில் பள்ளத்தை சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடையால் மயிலாடுதுறை நகர மக்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து, போர்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.