ETV Bharat / state

தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி! - போலீசார் விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணியில் தலைக்கவசம் அணிந்து உயிரிழப்பை தடுக்க வேண்டும், பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் பயன்படுத்த வேண்டும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது போன்ற நெறிமுறைகளை வலியுறுத்தி காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

mayiladuthurai police helmet awareness program

author img

By

Published : Oct 5, 2020, 4:46 AM IST

மயிலாடுதுறை: தலைக்கவசம் அணிந்து செல்ல வலியுறுத்தி காவல்துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மயிலாடுதுறை காவல் துறையினர் சார்பில் தலைக்கவசம் அணிந்து செல்ல வலியுறுத்தி, காவல் துறையினர் இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணியை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்தப் பேரணியில், தலைக்கவசம் அணிந்து உயிரிழப்பை தடுக்க வேண்டும், பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் பயன்படுத்த வேண்டும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும், வாகனம் ஓட்டும் பொழுது கண்டிப்பாக கைபேசி பயன்படுத்தவோ, மது அருந்தவோ கூடாது உள்ளிட்ட அரசு விதித்துள்ள சாலை விதிமுறைகளை கடைப்பிடித்து நடக்கவேண்டும் போன்றவை வலியுறுத்தப்பட்டது.

மேலும், நகரின் முக்கிய வீதிகள் வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து மயிலாடுதுறை காவல் துறையினரும், போக்குவரத்து துறை காவலர்கள் 50க்கும் மேற்பட்டோரும் பேரணியாக சென்றனர்.

நிறைவாக பேரணி தொடங்கிய இடத்திலேயே முடிவடைந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.