ETV Bharat / state

மயிலாடுதுறையின் ஆட்சியர் அலுவலகத்திற்கு தங்கள் இடத்தை தர மறுக்கும் மக்கள்!

மயிலாடுதுறை: புதிய மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு வீட்டுக் கொல்லைப்புறங்களையும் சேர்த்து கையகப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட பணிகளை மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

mayiladuthurai-people-
mayiladuthurai-people-
author img

By

Published : Sep 22, 2020, 10:53 AM IST

நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறையை 38ஆவது புதிய மாவட்டமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்து சிறப்பு அலுவலரை நியமித்தது. இதனைத்தொடர்ந்து எல்லைகளை வரையறை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைப்பதற்கான இடத்தை தர்மபுர ஆதீனம் அரசுக்குத் தருவதாக ஒப்புதல் அளித்ததை அடுத்து மன்னம்பந்தல் ஊராட்சியில் பால்பண்ணை பகுதியில் உள்ள ஆதீன இடங்களை அலுவலர்கள் பார்வையிட்டனர்.

மயிலாடுதுறையின் புதிய ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒதுக்கப்படும் இடத்திற்கு மக்கள் எதிர்ப்பு!

முளப்பாக்கத்தைவிட பால்பண்ணைபகுதி முக்கிய சாலையொட்டி இருப்பதால் இந்த இடத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைத்தால், போக்குவரத்து வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் பால்பண்ணை பகுதியில் உள்ள ஆதீன இடத்தை அளவீடு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. பால்பண்ணை பகுதியில் வீடுகளை தவிர்த்து விட்டு, வீட்டின் கொல்லைப்புறத்தையும் சேர்த்து அளவீட்டு அலுவலர்கள் அளவீடு செய்தனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது, "பால்பண்ணை பகுதியில் ஆட்சியர் அலுவலகம் வருவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், குடியிருப்புப் பகுதியில் பாதிப்பு இருக்காது என்று உத்ரவாதம் அளிக்காமல், தற்போது வீட்டுத் தோட்டங்களை கையகப்படுத்த அளவீடு செய்ததால் பணிகளைத் தடுத்து நிறுத்தினோம்.

மேலும் ஆதீன இடத்தில் விவசாயம் செய்து வந்த இடத்தை கையகப்படுத்துவதற்கு பதில் மாற்று இடம் வழங்க வேண்டும். அப்படி வழங்காமல் பணிகளை தொடர்ந்தால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்" எனக் கூறினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் துறையின் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரைவுடன் காவல் துறையினர் சிலர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த மக்களோடு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பிரச்னையில் நல்ல தீர்வு காணப்படும் வரை, எந்தப் பணிகளும் நடைபெறாது என்று உத்தரவாதம் அளித்ததால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: பேச்சுவார்த்தை நடத்திய சந்தீப் நந்தூரி; செல்வனின் உடலை வாங்க சம்மதித்த உறவினர்கள்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.