மயிலாடுதுறை தூக்கனாங்குளம் தெருவில் வசிக்கும் மேலிசெல்வம் மனைவி சந்திரா என்பவரது வீட்டில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
![தீவிபத்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-ngp-06a-2-house-fire-script-tn10023-hdmp4_07092020203844_0709f_1599491324_228.jpg)
இதில், சந்திராவுக்கு சொந்தமான இரண்டு வீடுகளும், அவர் நடத்தி வந்த உணவகமும் தீக்கிரையானது. சந்திராவின் மாடி வீட்டில் அமைக்கப்பட்டிருந்த ஷெட்டில் தீடிரென்று தீ பற்றி, காற்றின் வேகத்தில் வேகமாக பரவி அருகில் இருந்த சந்திராவின் மற்றொரு வீடு, அவர் நடத்திய வந்த உணவகம் ஆகியவற்றிலும் பற்றியது.
![தீயில் சேதமான வீடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-ngp-06a-2-house-fire-script-tn10023-hdmp4_07092020203844_0709f_1599491324_677.jpg)
இந்த விபத்தில் வீடு, உணவத்தில் இருந்த அனைத்து பொருள்களும் கருகி நாசமானது. தகவலறிந்து வந்த மயிலாடுதுறை தீயணைப்பு, மீட்புப் பணி வீரர்கள் முன்னணி நிலைய அலுவலர் மணிமாறன் தலைமையில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
இவ்விபத்து மின்கசிவின் காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு காரணமாக என்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.