மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி கிராமத்தில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் காரைக்காலிலிருந்து சாராய பாக்கெட்டுகளை மூட்டை மூட்டையாக காரில் பதுக்கி கடத்திவந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து காருடன் 26 மூட்டைகளில் இருந்த 13 ஆயிரம் சாராய பாக்கெட்டுகளை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். சாராய பாக்கெட்டுகளைக் கடத்திவந்த கார் ஓட்டுநரான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள இடும்பாவனத்தைச் சேர்ந்த மருதுபாண்டியன் கைதுசெய்யப்பட்டார்.
மேலும் சரக்கு விற்பனை செய்தவரும் அதனை வாங்கியவருமான விளாங்காடு தமிழ்செல்வன், கோவில்பத்து ஆறுமுகம் ஆகிய இருவரையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
பறிமுதல்செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகள் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும். இது குறித்து சீர்காழி மது அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: போதைப் பொருள்கள் சப்ளை... முதல் குற்றவாளியாக மோப்ப நாய் பிரிவு காவலர் கைது!