கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் அன்றாட உணவுக்கே திண்டாடி வருகின்றனர். ஊரடங்கால் அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், நகர்ப்புறங்களில் பெரும்பாலான ஏழை மக்கள் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் அம்மா உணவகங்களில்தான் காலை, மதிய உணவு சாப்பிட்டு தங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.
இந்நிலையில்,மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனை அருகில் இயங்கிவரும் அம்மா உணவகத்தில் காலை, மதிய உணவுகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.
மேலும், ஊரடங்கு முடியும்வரை இலவசமாக உணவு வழங்குவதற்காக தனது சொந்த நிதி ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையை மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் அண்ணாமலையிடம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
இதையும் படிங்க: கடந்த 24 மணி நேரத்தில் 1,752 பேருக்கு கரோனா: சுகாதார அமைச்சகம்