மயிலாடுதுறையில் கடந்த மூன்று மாதங்களாக பருத்தி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருமுறை பருத்தி செடி பயிர் செய்தால் அதில் மூன்று முறை பருத்தியை மகசூல் எடுக்கலாம்.
மயிலாடுதுறை அருகே ஆக்கூர் பகுதிகளில் உள்ள விவசாயிகள் இரண்டு முறை பருத்தி பஞ்சை எடுத்துள்ள நிலையில் முன்றாவது முறைக்கு பஞ்சு எடுக்க உள்ள, இந்நிலையில் பருத்தி செடியில் மாவுப்பூச்சி, தட்டை பூச்சி தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவுப்பூச்சி தாக்குதால் பருத்தியின் தரம் குறைந்து விலைபோகாத நிலை ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் அவ்வப்போது பெய்யும் மழையின் காரணமாக பருத்தி ஈரப்பதம் கூடி விவசாயிகள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், மாவுப்பூச்சியின் தாக்குதலும் தொடங்கியிருப்பது விவசாயிகளுக்கு இடையே கலக்கத்தை எற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'விவசாயத்துக்கு தண்ணீரில்லை... விளைவித்த பஞ்சுக்கு விலையில்லை' - குமுறும் பருத்தி விவசாயிகள்