ETV Bharat / state

காவிரி துலா உற்சவம்; மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் கோலாகலமாக நடந்த திருக்கல்யாணம்!

Mayiladuthurai Mayuranathaswami temple: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் திருவாவாடுதுறை ஆதீனம், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Mayiladuthurai Mayuranathaswami temple thirukalyanam
மாயூரநாதர் ஆலயத்தில் கோலாகலமாக நடந்த திருக்கல்யாணம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 8:01 AM IST

மாயூரநாதர் ஆலயத்தில் கோலாகலமாக நடந்த திருக்கல்யாணம்!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான மாயூரநாதர் கோயில் அமைந்துள்ளது. இது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடப் பெற்ற பழைமை வாய்ந்த கோயிலாகும். இங்குள்ள காவிரிக் கரையில் அம்பாள் மயிலாக இறைவனை பூஜித்ததால், சிவன் மயிலாக உருவம் கொண்டு பார்வதி தேவியுடன் சேர்ந்து மயூரதாண்டவம் ஆடி மயில் உருநீங்கி சுயஉரு பெற்றாள் என்பது ஐதீகம்.

இதை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஐப்பசி 1ஆம் தேதி முதல் மாயூரநாதர், வதான்யேஸ்வரர் கோயில்களில் இருந்து சாமி புறப்பட்டு, காவிரியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக மயூரநாதர் கோயில், வதான்யேஸ்வரர் கோயில், படித்துறை விஸ்வநாதர் கோயில், அய்யாரப்பர் கோயில், காசி விஸ்நாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கடந்த 7ஆம் தேதி கொடியேற்றப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. மேலும் 7ஆம் திருநாளான நேற்று அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்று, இரவு மாயூரநாதர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

அதில் மாயூரநாதர் - அவையாம்பிகையுடன் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினர். தொடர்ந்து ஊஞ்சள் உற்சவம், மாலை மாற்றுதல் நடைபெற்று பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். சிவாச்சாரியார்கள், வேத விற்பனர்கள் மந்திரம் ஓத, மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. அதனைத் தொடாந்து பூரணாகுதி செய்யப்பட்டு, சுவாமி அம்பாளுக்கு சோடச தீபாராதனை மகாதீபாராதனை நடைபெற்றது.

மேலும், திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் பங்கேற்று வழிபாடு செய்தனர். இதேபோல், மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான வள்ளலார் கோயில் எனப்படும் வதான்யேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதையொட்டி வதான்யேஸ்வரர் சுவாமி மற்றும் ஞானாம்பிகை அம்பாள் கோயிலின் வசந்த மண்டபத்தின் அருகில் எழுந்தருள செய்யப்பட்டு, எதிரெதிர் திசைகளில் நின்று மாலை மாற்றும் வைபவம் நடைபெற்று, பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, பெண்கள் சீர்வரிசை எடுத்து வர, சுவாமி அம்பாள் கோயிலைச் சுற்றி வந்து ஊஞ்சலில் எழுந்தருள செய்யப்பட்டு, பெண்கள் நலங்கு வைத்ததைத் தொடர்ந்து, மாங்கல்யதாரணம் செய்து திருக்கல்யாண வைபவம் நடந்தேறியது.

பின்னர் சுவாமி அம்பாளுக்கு மகா தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.