மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவின்றித் தவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மயிலாடுதுறையில் சிலர் ஊரடங்கால் வேலை இழந்து வாழ்வாதாரத்திற்கு தவித்து வருகின்றனர். இதனைப் போக்கும் பொருட்டு அம்மாவட்டத்தில் பரவலாக தங்கி சில்லறை, மொத்த வணிகம், அடகுக்கடை ஆகியவற்றை நடத்தி வரும் ஜெயின் சங்கத்தினர், அவர்கள் வசிக்கும் கட்டடத்தில் தாங்களே பூரி, லட்டு ஆகியவற்றைத் தயாரித்து, அதனை குடிநீர் பாட்டிலுடன் சேர்த்து பசியால் வாடும் ஏழை மக்களுக்கு கொடுக்க முன் வந்தனர்.
இந்த சேவையை யுவா ஜெயின் சங்கத் தலைவர் மகாவீர்சந்த் ஜெயின் தலைமையில் லவ்னீஸ் ஜெயின், கிஷோர் குமார், ஸ்ரீசந்தர், நீரஜ் ஆகிய நிர்வாகிகள், தன்னார்வலர்களின் உதவியுடன் சேர்ந்து செய்தனர்.
பின் சமைத்த உணவுகளைப் பொட்டலங்களாக கட்டி, இருசக்கர வாகனங்களில் ஏற்றிக்கொண்டு, நகரின் பல்வேறு பகுதிகளில் பசியால் வாடுபவர்களை தேடிச்சென்று உணவு வழங்கினர்.
மேலும், நகரின் பல்வேறு பகுதியில் சுகாதாரப் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 250 பேருக்கு அவர்கள் உணவினை வழங்கினர்.
இந்த சேவையை முதலில் தன்னார்வலர்களிடம் இருந்து அம்மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, வட்டாட்சியர் ராகவன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலர் முத்துகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதையும் படிங்க: குறைந்துவரும் கொரோனா தொற்று; 27ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நலம்!