நாகை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், வணிகர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
அனைவரும் மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.