ETV Bharat / state

மயிலாடுதுறை விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்!

மயிலாடுதுறை: அகர மணக்குடியில் கஞ்சாநகர வாய்க்காலை முறையாக தூர்வாராத பொதுபணித்துறையிரை கண்டித்து வயலில் இறங்கி கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

farmers
farmers
author img

By

Published : Sep 29, 2020, 9:54 AM IST

மயிலாடுதுறை அருகே அகர மணக்குடியில் செல்லும் கஞ்சாநகர வாய்க்கால் பாசனம், மற்றும் வடிகால் வாய்க்காலாக உள்ளது. ஐந்து கிலோ மீட்டர் தூரம்வரை செல்லும் இந்த வாய்க்கால் மூலம் மணக்குடி, அகரமணக்குடி பகுதியில் வடிகால் வாய்க்காலாகவும் கஞ்சாநகரம், கருங்குயில்நாதன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்குப் பாசன வாய்க்காலாகவும் செல்கிறது.

mayiladuthurai-farmers-protest-against-water-invading-in-farming-land
விவசாயிகள் போராட்டம்

அப்பகுதியில் மூன்று கி.மீ. தூரம்வரை தூர்வாரப்பட்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் தூர்வாரப்படவில்லை. இதனால் கஞ்சாநகரம் வாய்காலில் திறந்துவிடப்பட்ட காவிரி தண்ணீர் அகர மணக்குடி கிராமத்தில் விளைநிலங்களில் புகுந்து 50 ஏக்கரில் நேரடி நெல்விதைப்பில் உள்ள வயல்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

மயிலாடுதுறை விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்!

பத்து நாட்களாக தண்ணீர் வடிய வழியில்லாததால் பயிர்கள் அழுகிவிட்டன. புகார் அளித்தும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் சுமார் நூறு ஏக்கர் விவசாய நிலம் ஒட்டுமொத்தமாக மூழ்கி உள்ளது எனக் கூறி விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி தண்ணீர் சூழ்ந்த விலைநிலங்களில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள கஞ்சாநகர வாய்க்காலை முழுமையாக தூர்வாரி விவசாய பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: புறவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.