நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஓன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக சரவணன் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவசர ஊர்தி மூலம் மயிலாடுதுறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்த திமுக எம்எல்ஏவிற்கு எதிராக அதிமுகவினர் முழக்கம்!