ETV Bharat / state

‘சுற்றுலாப் பயணிகளுக்கான வளர்ச்சிப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்’ - அமைச்சர் கா.ராமச்சந்திரன்! - தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன்

தரங்கம்பாடியில் சுற்றுலாத்துறையின் மூலம் ரூ.10.17 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். மேலும், தரங்கம்பாடி, பூம்புகாரில் நடைபெற்று வரும் பணிகள் விரைவில் முடிவுற்று மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என கூறியுள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்

author img

By

Published : Jun 23, 2023, 12:45 PM IST

சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்

மயிலாடுதுறை: சுற்றுலாப் பயணிகளுக்கான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களான பூம்புகார் கடற்கரை மற்றும் தரங்கம்பாடி கடற்கரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து திருக்கடையூரில் உள்ள சுற்றுலாத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தங்கும் விடுதியில் தங்கும் இடம், உணவு வழங்கும் இடம், கட்டண விவரம் மற்றும் அடிப்படை வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

திருகடையூர் தமிழ்நாடு தங்கும் விடுதியை பொருத்தவரையில், ஹோட்டலின் வாசல் பகுதியில் கார்டன் வசதி, தங்கும் இடம் போன்றவை பராமரிக்கப்படாமல் இருக்கிறது. இதை விரைவில் சீரமைக்கப்பட்டு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டுக்கு வரும்” என்றார்.

இதையும் படிங்க: திருநங்கை என்பதால் குழந்தையை தத்தெடுக்க மறுப்பு - மத்திய அரசு ஆணையத்துக்கு பறந்த உத்தரவு!

மேலும், “தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை பழுதடைந்து உள்ள நிலையில், அதை சரி செய்ய சுற்றுலாத் துறை சார்பில் ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படவுள்ளது. அதுமட்டுமில்லாமல், பூம்புகாரில் ரூ.23 கோடியே 60 லட்சம் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 6 மாதங்களில் முடிக்கப்படும்” என அதிகாரிகள் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “திருக்கடையூரில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் கட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகின்றன. இதை முறையாக பராமரித்தால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவார்கள். மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் வந்துள்ளனர். நிகழாண்டு 4 மாதங்களில் 9 லட்சத்து 71 ஆயிரம் பேர் வந்துள்னர்.

மேலும், தரங்கம்பாடியில் உள்ள ஆளுநர் மாளிகையை அடுத்த ஆண்டில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தரங்கம்பாடியில் அடுத்தகட்டமாக மேலும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார். ஆய்வின்போது சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்துரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்.. இரண்டு பெண்களுக்கு வார்னிங்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.