நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் அமைந்துள்ளது, தருமபுரம் ஆதீனம். இந்த ஆதீனத்தின் 26ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி முக்தி அடைந்தார்.
இதைத் தொடர்ந்து, தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதைத் தொடர்ந்து, தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான திருக்கோயிலுக்கு பட்டினப்பிரவேசம் மேற்கொண்டு வருகிறார். ஆனால், இது மனிதனை மனிதன் சுமந்து செல்லும் மனித மாண்புக்கு எதிரான செயல் என எதிர்ப்பு தெரிவித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை பத்திரிகை வாயிலாக வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், திராவிடர் கழகத்தின் நாகை மாவட்டச் செயலாளர் தளபதிராஜ் தலைமையில் திரளான திக-வினர் தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமியைச் சந்தித்து, வீரமணியின் அறிக்கையை அவரிடம் காண்பித்து, பல்லக்கில் தூக்கிச் செல்லும் இச்செயலை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: பாட்டியைக் கொன்று நகையை கொள்ளையடித்த பேரன் உள்ளிட்ட இருவர் கைது!