நாகை மாவட்டம், மயிலாடுதுறை கூறைநாடு சின்ன பள்ளிவாசல் தெருவில், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தமாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட சுமார் 500 பேர் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை வடக்கு மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ‘மயிலாடுதுறை ஷாஹின் பாக்’ என தலைப்பிட்டு நடத்தப்படும் இந்த தொடர் போராட்டத்துக்கு, கூறைநாடு ஜமாத் தலைவர் சபீர் அகமது தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டோர் தங்கள் கைகளில் செல்போன் டார்ச் விளக்கு ஏந்தி, வெளிச்சம் ஏற்படுத்தி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க :வைக்கோல் லாரி மின்கம்பிகளில் உரசி தீ விபத்து!