மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோவில், ஆக்கூர், தரங்கம்பாடி வழியாக பொறையாருக்கு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. அதில் 100-திற்க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
பேருந்தில் நிற்க இடமில்லாததால் படிக்கட்டுகளில் கல்லூரி மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்தனர்.
இந்நிலையில் பெரிய மாரியம்மன் கோயில் அருகே தரங்கம்பாடி சாலையில் பேருந்து சென்றபோது, பின்புற படிக்கட்டு திடீரென உடைந்து விழுந்தது. எனினும் அதில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் கீழே குதித்தனர் காயம் இன்றி தப்பினர்.
படிக்கட்டு உடைந்தது தெரியாமல் சென்ற பேருந்தை, தட்டி கூச்சலிட்டு மாணவர்கள் டிரைவருக்கு தெரியப்படுத்தியதால் பேருந்து நிறுத்தப்பட்டது. நடத்துநர் இறங்கி சென்று நடுரோட்டில் உடைந்து கிடந்த பேருந்தின் படிக்கட்டை எடுத்து பேருந்தில் போட்ட உடன் மீண்டும் பேருந்து புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்தனர்.
கல்லூரி செல்லும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும், அரசு பணிமனையில் உள்ள பேருந்துகளை உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க:Galwan Valley clash: தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு வீர் சக்ரா விருது!