ETV Bharat / state

பொங்கல் கரும்புக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்

சீர்காழி அருகே அரசு கொள்முதல் செய்யும் பொங்கல் கரும்புக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கரும்பு கொள்முதல்
கரும்பு கொள்முதல்
author img

By

Published : Dec 27, 2020, 10:38 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவிற்கு உட்பட்ட காத்திருப்பு, செம்பதனிருப்பு, அல்லிவிளாகம், ராதாநல்லூர் ஆகிய கிராமங்களில் பொங்கல் கரும்பு சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. கரும்பு நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நிவர், புரெவி புயல்கள் காரணமாக, கரும்புகள் வயலில் சாய்ந்தும், வடிகால்கள் தூர்வாரப்படாத காரணத்தால் மழைநீர் வயல்களில் சூழ்ந்தும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

ஏக்கருக்கு ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் செலவு செய்திருந்த நிலையில், சாய்ந்த கரும்புகளை தூக்கி நிறுத்தி கட்டுவதற்கு ஏக்கருக்கு ரூபாய் முப்பதாயிரம் வரை கூடுதல் செலவு செய்துள்ளனர். இந்நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுக்குகாக, ஒரு கரும்பு 15 ரூபாய் என்ற வீதம் அரசு நேரடி கொள்முதல் செய்யவுள்ளது.

பொங்கல் கரும்பு உற்பத்தி

இதனால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கரும்பு ஒன்றுக்கு 25 ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில், உற்பத்தி விலை கிடைக்காமல் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே அரசு கொள்முதல் செய்யும் கரும்புக்கு ரூபாய் 25 தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வீடு இல்லாத ஏழைகளுக்கு திமுக ஆட்சியில் வீடு; ராமநாதபுரம் எம்பி வாக்குறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.