ETV Bharat / state

மயிலாடுதுறை-தஞ்சாவூர் இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் - மயிலாடுதுறை-தஞ்சாவூர் இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம்

நாகை: மயிலாடுதுறை-தஞ்சாவூர் இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இன்று (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட்டது.

மயிலாடுதுறை-தஞ்சாவூர் இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம்

author img

By

Published : Nov 11, 2020, 10:42 PM IST

இந்தியாவில் ரயில்வழிப் பாதையை முழுவதுமாக மின்மயமாக்க ரயில்வே நிர்வாகம் முடிவுசெய்தது. இதனை அடுத்து அனைத்து ரயில்பாதைகளையும் மின்மயமாக்கும் பணிகளை ரயில்வே துறை துரிதப்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில், மத்திய அரசின் ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் விழுப்புரத்திலிருந்து, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் வரை ரூ. 250 கோடி மதிப்பீட்டில் 228 கி.மீ தூரம் கொண்ட ரயில்வே பாதைகளை மின்யமாக்கும் பணிகளைச் செய்துவருகிறது.

தற்போது விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை, திருவாரூர் வரை மின்யமாக்கும் பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர் வரையிலான 70 கி.மீ. தூரம் மின்யமாக்கும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபைக்குமார்ராஜ் தலைமையில் அத்துறை அலுவலர்கள் சிலர், ரயில் பாதைகளை ஆய்வுச்செய்தனர். இன்று (புதன்கிழமை) மாலை 4.50 மணி அளவில், மயிலாடுதுறை-தஞ்சாவூர் இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இது குறித்து பேசிய அலுவலர்கள், 100கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயில் 70 கி.மீ, தூரத்தை ஒரு மணி நேரத்தில் சென்றடையும் என்று தெரிவித்தனர். இந்தச் சோதனை ஓட்டத்தின் போது திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:

அமைச்சர் துரைக்கண்ணு இறப்பில் என்ன மர்மம்? - ஸ்டாலினுக்கு முதலமைச்சர் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.