நாகை மாவட்டம் சீர்காழி அருகே வேட்டங்குடி கிராமத்தில் எளிமையான முறையில் நடைபெற்ற திருமணத்தில் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் என வெறும் 15 நபர்கள் மட்டுமே கலந்துக்கொண்டு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
இருந்தபோதிலும், இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் போதிய சமூக இடைவெளி பின்பற்றாமலும், முக கவசங்கள் அணியாமலும் எந்தவித அச்சமின்றி இருந்ததை காணும்போது ,கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடையே கரோனா வைரஸ் தொற்று குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்பது தெரிகிறது.
தமிழ்நாட்டில், கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்நேரத்தில், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகளவில் கலந்துக்கொள்வதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட வாய்புள்ளது. எனவே இதுகுறித்து, கிராம மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.