நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள சின்னதும்பூர் செல்லமுத்து மாரியம்மன் கோயில் கருவறையிலிருந்த பழமை வாய்ந்த உற்சவர் சிலை, 5 குத்து விளக்குகள், 6 சொம்புகள், ஒரு கைவிளக்கு ஆகியவற்றை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, போலீசார் தனிப்படை அமைத்து திருடியவர்களை தேடிவந்தனர். இந்நிலையில் வேதாரண்யம் மறைஞாயநல்லூர் பொன்னங்காட்டைச் சேர்ந்த உதயராஜன் (30) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து வந்து விசாரணை செய்ததில், அவர் கோயிலில் சிலையை திருடியது தெரிய வந்தது. உதயராஜன் வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழமை வாய்ந்த மாரியம்மன் உற்சவர் சிலை, குத்து விளக்குகள், சொம்புகள் உள்ளிட்டவற்றை மீட்ட போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.