ETV Bharat / state

மாண்டஸ் புயலை எதிர்கொள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் - மயிலாடுதுறை கலெக்டர் - மாவட்ட ஆட்சியர் லலிதா

மாண்டஸ் புயல் மற்றும் மழையை எதிர்கொள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 8, 2022, 4:18 PM IST

மயிலாடுதுறை: ’மாண்டஸ் புயல் மற்றும் மழையை எதிர்கொள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மாலை கனமழை தொடங்கும் என எதிர்பார்க்கபடுவதால் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம், நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம்’ என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர் கூறுகையில், 'மயிலாடுதுறை மாவட்டத்தில் "மாண்டஸ் புயல்" மழையினை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 4 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. 11 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக நிவாரண மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என 346 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிக்கக்கூடிய இடங்களாக 12 பகுதிகள், அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் 33, குறைந்த அளவு பாதிக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 4500-க்கும் அதிகமான முதல்நிலை பொறுப்பாளர்கள் அனைத்து வட்டங்களிலும் பயிற்சியளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளார்கள்.

கடலோரப் பகுதிகளைக் கண்காணிக்க 24 பேர் கொண்ட தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் வானகிரி கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். புயல் மற்றும் மழை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை உடனடியாக அகற்றி இயல்பு நிலையினை ஏற்படுத்திட ஏதுவாக ஜேசிபி 34, ஜெனரேட்டர்கள் 7, பவர்சா 22, ஹிட்டாச்சி 10, மணல் மூட்டைகள் 26870, மரம் அறுக்கும் கருவிகள், சவுக்கு கம்பங்கள் 23065, பிளிச்சிங் பவுடர் 4700 கிலோ ஆகியன போதிய அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன’ எனவும் தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் லலிதா

மேலும், 'மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார்கள். பொதுமக்கள் புயல், மழைக் காலங்களில் பாதுகாப்பாக இருக்கவும். அரசின் எச்சரிக்கைகளை முழுமையாக கடைபிடித்து நடந்திடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மாலை கனமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். நீர் நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம்' என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: மாண்டஸ் புயலால் என்ன நடக்கும்? - வானிலை ஆய்வு மையத்தின் முழு தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.