நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே காளி ஊராட்சியில் உள்ள பொய்கைகுடி கிராமத்தின் மூன்றாம் குளத்தை, தனிநபர்கள் தூர்வார அனுமதி வாங்கிவிட்டு சட்டத்திற்கு புறம்பாக 20 அடி ஆழத்துக்கு மணல் அள்ளி கடந்த ஒருவாரமாக விற்பனை செய்துவந்துள்ளனர். இதனைக் கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் மணல் டிராக்டர், கிட்டாச்சு இயந்திரங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அதிக அளவில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, குடிநீர் பிரச்னை ஏற்படுவதாகவும் மணல் டிராக்டர்களால் விபத்து ஏற்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அறிந்து வந்த மணல்மேடு காவல் துறையினர் கொடுத்த வாக்குறுதியை அடுத்து மக்கள் போரட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க : நான்கு மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை