ETV Bharat / state

பாதாள சாக்கடை திட்டத்தில் தொடரும் பிரச்னைகள்: பொதுமக்கள் கடும் அவதி! - பாதாள சாக்கடை

நாகை: மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே பாதாள சாக்கடை திட்டத்தில் பிரச்னை ஏற்பட்டு, கழிவுநீர் வெளியாவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

மயிலாடுதுறை
author img

By

Published : Apr 27, 2019, 10:35 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தின்பின் பகுதியில் மழைநீர் ஓடுவதற்காக கட்டப்பட்டுள்ள வடிகால் சாளரத்தில் கடந்த 5 நாட்களாக பொதுக்கழிப்பிடம் மற்றும் பழைய பேருந்து நிலைய கழிப்பிடம் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் மனித கழிவுகள் தேங்கி நிற்கின்றது.

மயிலாடுதுறை

இதிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தினால் ஆட்டோ ஓட்டுநர்கள், வணிகர்கள், அவ்வழியே வந்து செல்லும் பொதுமக்கள் ஆகியோர் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதையடுத்து, இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்தக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வணிகர்கள் ஆகியோர் மனு கொடுத்துள்ளனர்.

Intro:மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டத்தில் தொடரும் பிரச்சினைகள். பேருந்து நிலையம் அருகில் மனித கழிவுகள் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் பயணிகள், பாதசாரிகள், வர்த்தகர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு:-

Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் அண்மைக் காலமாக பிரச்சினை ஏற்பட்டு பல்வேறு இடங்களில் சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் ஆள்நுழைவு தொட்டி வழியே சாக்கடை நீர் வெளியேறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் புறவாசல் பகுதியில் மழைநீர் ஓடுவதற்காக கட்டப்பட்டுள்ள வடிகால் சாளரத்தில் கடந்த 5 நாட்களாக கிட்டப்பா அங்காடி அருகே உள்ள பொதுக்கழிப்பிடம் மற்றும் பழைய பேருந்து நிலைய கழிப்பிடம் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் மனித கழிவுகள் தேங்கி நிற்கின்றது. இதிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள், வர்த்தகர்கள் மற்றும் அவ்வழியே வந்து செல்லும் பயணிகள் கடும் அவதியுற்று வருகின்றனர். மேலும் இதனால் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் வர்த்தகர்கள் பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள வடிகால் சாளரத்தை உடனடியாக சீரமைத்து தரக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.

பேட்டி:- நாஞ்சில் சங்கர், ஆட்டோ ஓட்டுனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.